கோத்தகிரியில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம்

By Velmurugan s  |  First Published Feb 28, 2023, 4:45 PM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.


மேற்குத் தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ள கோவை மற்றும் நீலகிரி மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக உரைப்பணி நிலவி வரும் நிலையில் வனப்பகுதிக்குள் புற்கள் காய்ந்து வறட்சியான நிலை நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் மற்றும் இதர விலங்குகள் தற்போது சாலைகளில் உலா வர தொடங்கியுள்ளன.

நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் மேட்டுப்பாளையம், கோத்தகிரி சாலையில் ஓரமாக நின்று கொண்டது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் யானை இருப்பதை கண்டு தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திக் கொண்டனர்.

Latest Videos

undefined

அரசு கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கிய மர்ம நபர்களால் பரபரப்பு

அதன் பின்னர் யானை ஓரமாக நகர்ந்து சென்ற பிறகு தங்களது வாகனங்களை எடுத்துக் கொண்டு சென்றனர்.காட்டு பகுதிகளில் உள்ள குட்டைகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால் யானைகள் மற்றும் காட்டு விலங்குகள் காட்டை விட்டு வெளியே வர தொடங்கி உள்ளது எனவே வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து விலங்குகளுக்கு கோடை கால தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் இல்லை என்றால் மனம் விலங்கு மோதல்கள் ஏற்படும் என்பது குறிப்பிடதக்கது.

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் அனைவரும் மோடியால் பயனடைந்தவர்கள் தான் - வானதி விளக்கம்

click me!