கோவை தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள் கோவை விமான நிலையத்தில் சாலை விழிப்புணர்வு மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.
கோவை வட்டமலை பாளையம் பகுதியில் உள்ளது கங்கா மருத்துவமனை செவிலியர் கல்லூரி. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பயில கூடிய மாணவர்கள் பல்வேறு விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி வருகின்றனர்.
முதலாம் ஆண்டு பயிலக்கூடிய 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று கோவை விமான நிலையத்தில் உடல் உறுப்பு தானம், தோல் தானம் மற்றும் சாலை விபத்து குறித்த விழிப்புணர்வை முக பாவனைகளின் மூலம் நாடகமாக விமான நிலையத்தின் வளாகத்தில் அரங்கேற்றினர்.
இந்த நாடகம் விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் மாணவர்கள் கூறும்போது கோவை மாநகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் முகபாவனை நாடகம் நடத்தி வருகிறோம்.
இதனால் பொதுமக்கள் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும் தோல் உறுப்பு தானம் செய்ய வேண்டும். அதேபோல கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும், மது அருந்திவிட்டு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது என வேண்டுகோள் விடுத்தனர்.