2 கிராம் தங்கத்தில் தேர்தல் விழிப்புணர்வு; கோவை கலைஞரின் அசத்தல் முயற்சிக்கு குவியும் பாராட்டு

By Velmurugan s  |  First Published Mar 27, 2024, 10:15 AM IST

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையைச் சேர்ந்த நகை செய்யும் கலைஞர் ஒருவர் 2 கிராம் தங்கத்தில் தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளர் UMT ராஜா 100% வாக்குப்பதிவை எடுத்துரைக்கும் வண்ணம் 2 கிராம் தங்கத்தில் பூட்டு சாவியை உருவாக்கி உள்ளார். 

ADMK vs BJP: பாஜகவிற்கு தமிழகத்தில் 4 எம்எல்ஏக்கள் அதிமுக போட்ட பிச்சை- மோடி அரசை இறங்கி அடித்த சி.வி சண்முகம்

Latest Videos

undefined

இரண்டு கிராம் தங்கத்தில் இந்திய வரைபடத்துடன் கூடிய ஒரு பூட்டையும், 100% வாக்கு என்ற சாவியையும் உருவாக்கி உள்ளார். மேலும் அந்த சாவியில் தேர்தல் நடைபெறும் 19ஆம் தேதியை குறிப்பிடும் வண்ணம் 19 என்ற எண்ணையும், தேர்தல் முத்திரையையும், தேர்தல் மை வைத்த விரலையும் வடிவமைத்துள்ளார். 

Vijay Antony : சரியான ஆள் பார்த்து ஓட்டு போடுங்க ஆனால் நோட்டாவுக்கு ஓட்டு போடாதீங்க.. விஜய் ஆண்டனி அட்வைஸ்..

ஜனநாயகத்தின் திறவுகோல் நமது வாக்கு என்பதை அடிப்படையாகக் கொண்டு வாக்கு தங்கமாகவும் விரல் மை கருப்பு வைரம் என்பதை குறிக்கும் விதமாகவும் இதனை வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக இரண்டு நாட்கள் செலவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

click me!