கோவையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவையில் இதுவரை 939 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது முதலே தலைநகரான சென்னையில் தான் தொற்று அதிகரித்துக் காணப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகவே சென்னையை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டு கோவை முதலிடம் வகித்து வருகிறது. நேற்ற் ஒரே நாளில் மட்டும் 4 ஆயிரத்து 734 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 939 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
undefined
கடந்த சில நாட்களாகவே கோவை மாநகராட்சி பகுதிகளில் மட்டுமே 70 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 57 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும் அதிர்ச்சியளிக்கும் விதமாக தற்போது கோவையின் கிராமப் பகுதிகளில் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக சூலூர், அன்னூர், தொண்டாமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் தொற்று அதிகரித்து வருகிறது.
கோவையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவையில் இதுவரை 939 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கைக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே கொரோனாவைக் கட்டுப்படுத்த களமிறங்கியுள்ள மாநகராட்சி அதிகாரிகள் கோவையில் வீடு வீடாக சென்று மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் வீதிகள் தோறும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.