கோவையில் கத்தியுடன் இன்ஸ்ட்டாகிராமில் வீடியோ வெளியிட்ட தமன்னா என்கின்ற வினோதினிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து வீடியோ வெளியிட்ட கோவையைச் சேர்ந்த பெண் வைரல் ஆனார். இந்த நிலையில் இந்த வீடியோக்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தொடர்ந்து வீடியோ வெளியிட்ட வினோதினி என்ற தமன்னாவை போலீசார் தேடி வந்தனர்.
அதேபோல கஞ்சா வழக்கிலும் தேடிவந்தனர். இதில் கடந்த 2021ம் ஆண்டு கஞ்சா வழக்கில் வினோதினி என்ற தமன்னா மற்றும் சூரிய பிரசாத் ஆகியோர் மீது பீளமேடு காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்றியமையா பண்டகங்கள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வினோதினி நீதிமன்றத்தில் வாய்தாவிற்கு தொடர்ந்து ஆஜராகவில்லை. இதையடுத்து வினோதினிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
திருச்சியில் குடும்பத்தகராறில் தாக்குதல் கல்லூரி பெண் ஊழியர் கவலைக்கிடம் - கணவன் கைது
இதைத்தொடர்ந்து போலீசார் வினோதினியை தேடி வந்த நிலையில் சங்ககிரி பகுதியில் கைது செய்தனர். பின்னர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள இன்றியமையா பண்டகங்கள் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி லோகேஷ்வரன், வினோதினி என்கின்ற தமன்னாவை நீதிமன்ற காவலில் அடைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் .வினோதினி என்ற தமன்னா தான் 6 மாத கர்ப்பிணி என்றும், ஜாமீன் கோரியும் மனுத்தாக்கல் செய்தார்.
ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் மறு உத்திரவு வரும் வரை தினமும் பீளமேடு காவல் நிலையத்தில் அஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.