தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 242ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாததிப்பால் அடுத்தடுத்து உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 242ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, மொத்த பாதிப்பு 35,97,744ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 1,216 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் 112 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
இந்நிலையில், கடந்த 17ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணிற்கு ஏற்கனவே நுரையீரல் புற்றுநோய், சர்க்கரை உள்ளிட்ட இணை நோய்களும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற திருச்சி இளைஞர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி, திருப்பூரில் அடுத்தடுத்து கொரோனாவால் உயிரிழப்புகள் சம்பவங்கள் நிகழ்வது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.