கோவை மாவட்டம் ராமநாதபுரம் அங்கண்ணன் வீதியை சேர்ந்தவர் காந்தரூபன் (53). இவரது மனைவி பழனியம்மாள் (49). இவர்களது மகள் தீட்சனாதேவி (23). இந்த தம்பதி அந்த பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர்.
ஏலச்சீட்டு நடத்தி நஷ்டம் ஏற்பட்டதால் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு வந்த நிலையில் தாய், மகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை மாவட்டம் ராமநாதபுரம் அங்கண்ணன் வீதியை சேர்ந்தவர் காந்தரூபன் (53). இவரது மனைவி பழனியம்மாள் (49). இவர்களது மகள் தீட்சனாதேவி (23). இந்த தம்பதி அந்த பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். வட்டி தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் திரும்பி தரவில்லை. இதனால், சீட்டு கட்டியவர்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதை அக்கம் பக்கத்தினர் வேடிக்கை பார்த்தனர்.
இதையும் படிங்க;- எனக்கு நீங்க அப்பா மாதிரி.. ப்ளீஸ் விட்ருங்க! கெஞ்சியும் விடாமல் இளம்பெண்ணை கதறவிட்ட தாயின் கள்ளக்காதலன்.!
இந்நிலையில், காந்தரூபன் தனது உறவினருக்கு போன் செய்து நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். இதனால், பதறிப்போய் உறவினர்கள் வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. பின்னர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பழனியம்மாள், தீட்சனாதேவி வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக கிடந்தனர். காந்தரூபன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பத்துடன் தற்கொலை முயன்றதில் மனைவி, மகள் உயிரிழந்த நிலையில் காந்தரூபன் சிகிச்சை பெற்று வருகிறார் என்றனர்.
இதையும் படிங்க;- ஆசை, கனவு, லட்சியம் எல்லாம் மண்ணோடு மண்ணா போச்சு.. டாக்டர்கள் அலட்சியத்தால் கால்பந்து வீராங்கனை பிரியா பலி.!