Lone Wolf Attack: கோவை கார் வெடிப்பு; 3 கோவில்களை தனி ஓநாய் திட்டம் மூலம் தாக்குவதற்கு ஒத்திகை; பகீர் தகவல்!!

By vinoth kumarFirst Published Oct 29, 2022, 2:58 PM IST
Highlights

கோவை கார் வெடிப்பு சம்பவம் தனி ஓநாய் தாக்குதல் முறை முறையை ஒத்திருப்பது தெரியவந்துள்ளது. தனி ஓநாய் தாக்குதல் என்பது, தீவிரவாத அமைப்பின் உதவியின்றி தனியாக சித்தாந்த்திற்காக தாக்குதல் நடத்தும் முறையாகும்.

கோவை உக்கடம் கார் வெடிப்பு சம்பவம் சர்வதேச நாடுகள் சிலவற்றில் நடைபெற்ற தனி ஓநாய் தாக்குதல் பாணியில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகின்றனர்.  

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் எதிரில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், பழைய துணிக்கடை வியாபாரியான ஜமோசா முபின் உயிரிழந்தார். சம்பவ நடந்த இடத்தில் ஆணி, கோலிக்குண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. 

இதையும் படிங்க;- வெடி பொருட்களை பிலிப்கார்ட், அமேசானில் வாங்கிய அப்ஸர் கான்..! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

இந்த வழக்கு தொடர்பாக தமிழக காவல்துறை நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், கோவை கார் வெடிப்பு சம்பவம் தனி ஓநாய் தாக்குதல் முறை முறையை ஒத்திருப்பது தெரியவந்துள்ளது. தனி ஓநாய் தாக்குதல் என்பது, தீவிரவாத அமைப்பின் உதவியின்றி தனியாக சித்தாந்த்திற்காக தாக்குதல் நடத்தும் முறையாகும்.

கோவையில் மூன்று கோவில்களை தாக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. உக்கடம் சங்கமேஸ்வரர், டவுன்ஹால்கோனியம்மன், புலியகுளம் அருள்மிகு விநாயகர் உள்ளிட்ட கோவில்களை தாக்க திட்டமிட்டிருந்தனர். ஜமேஷா முபின் வீட்டிலிருந்து புலியகுளம் அருள்மிகு விநாயகர் கோவில் 4 கிலோ மீட்டர் தூரத்திலும், கோனியம்மன் திருக்கோவில் 450 மீட்டர் தூரத்திலும், சங்கமேஸ்வரர் திருக்கோவில் 350 மீட்டர் தூரத்திலும் இருந்ததால் சங்கமேஸ்வரர் கோவிலை தாக்கும் முயற்சியில் வெடி விபத்தை நடத்தியதும் அம்பலமாகியுள்ளது. இதற்காக ஒத்திகையும் பார்த்துள்ளனர். தற்போது அந்தப் பகுதிகளில் நிறுவப்பட்டு இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

வெடி விபத்துக்கு பயன்படுத்திய சிலிண்டர் காந்திபார்க் இண்டேன் ஏஜென்சியிலிருந்து வாங்கப்பட்டதும், வெடி மருந்து கலவைக்கு பயன்படுத்திய டிரம் லாரிப்பேட்டை பழைய இரும்பு கடையிலிருந்து வாங்கப்பட்டதும் தெரியவந்ததுள்ளது. ஜமேஷா முபின், அஃப்சர்கான் மற்றும் அசாருதீன் ஆகிய மூவரும் இந்த சதிவேலையில் முதல் ஆட்களாக நின்று செயல்பட்டதும் ஏற்கனவே சோதனை அடிப்படையில் அப்பகுதிகளுக்கு சென்று பார்வையிட்ட பின்னரே வெடி விபத்து சம்பவத்தை  அரங்கேற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க;- உளவுத்துறை ‘அன்றே’ கொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்

click me!