Jos Alukkas: குற்றவாளிக்கு ரன்னிங், ஜம்பிங் தெரிந்ததால் அவரை பிடிப்பது சவாலாக இருந்தது - போலீஸ் விளக்கம்

By Velmurugan sFirst Published Dec 12, 2023, 4:20 PM IST
Highlights

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த விஜய் ரன்னிங், ஜம்பிங்கில் திறமை வாய்ந்தவராக இருந்ததால் அவரை பிடிப்பது காவல்துறைக்கு சவாலாக இருந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஜோஸ் அலுக்காஸ் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான விஜயை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த துணை காவல் ஆணையாளர் சந்தீஷ், கோவையில் கடந்த நவம்பர் 27ம் தேதி ஜோஸ் ஆலுக்காஸ்  நகை கடையில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை தேடும் பணி நடந்து வந்தது. 

கோவை நகரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 300 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், கொள்ளையில் ஈடுபட்டது தருமபுரியைச் சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையனை தேடும் பணி வேகப்படுத்தப்பட்டது. இதில் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில்  தங்கி இருந்த விஜயின் மனைவி நர்மதா கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்த 3 கிலோ தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

2 வயதில் உயிரிழந்த ஆசை மகளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய தந்தை; ஊர்கூடி வழிபாடு

இதே போல் தருமபுரியில் இலங்கை அகதிகள் முகாமில் இருந்த விஜயின் மாமியார் யோகா ராணி கைது செய்யப்பட்டு, அவர் மறைத்து வைத்திருந்த 1.2 கிலோ நகைகள்  மீட்கப்பட்டன. தொடர்ச்சியாக விஜய்யின் நடமாட்டத்தை கண்காணித்த தனிப்படையினர், ஆந்திர மாநிலம் காலகஸ்தியில் இருந்து சென்னைக்கு வருவதை கண்டுபிடித்தனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் சிம்கார்டு வாங்குவதற்காக முயற்சி செய்த விஜய்யை தனிப்படையினர் கைது செய்ததாக தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கடந்த 14 நாட்களாக விஜயின் நடமாட்டத்தை தொடர்ச்சியாக கண்காணித்து வந்ததாகவும், ஆனால் அவனிடம் செல்போன் உள்ளிட்ட எந்த தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாததால் தேடுவதில் பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவித்தார். எனினும் கைரேகை பதிவுகள், நவீன தொழில்நுட்ப உதவியுடன் விஜயின் நடமாட்டம் கண்டறியப்பட்டதாக கூறினார். விஜயை பிடிக்கும் பணியில் 48 காவலர்கள் அடங்கிய ஐந்து தனி படைகள் இரவு பகலாக ஈடுபட்டதாக தெரிவித்தார்.

எந்தவித துணையும் இன்றி தற்செயலாக நகைக்கடையில் புகுந்து விஜய் கொள்ளை அடித்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக கூறினார். கோவை மாநகரில் அதிக மதிப்புடைய பொருள்களை விற்பனை செய்யும் நகை கடைகள், செல்போன் கடைகள், கைக்கடிகார கடைகள் ஆகிய உரிமையாளருடன் நடத்தப்பட்ட கூட்டத்தில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அறிவுறுத்தப்பட்டது.

ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர் வெட்டி படுகொலை; திருச்சியில் பரபரப்பு

பழைய கேமராக்களை மாற்றி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கேமராக்கள் பொருத்தவும், சென்சார் வசதியுடன் கூடிய வைப்ரேஷன் மற்றும்  மோசன் சென்சார் வசதியுடன் கூடிய கேமராக்களையும் பொருத்தமும் அறிவுறுத்தியுள்ளது. மொத்தம் 5.15 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதில் 5.12 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

கொள்ளையன் தருமபுரியில் மலை மற்றும் காடுகளை ஒட்டிய பகுதியில் பிறந்து வளர்ந்ததாலும், அவர் ஓடுதல், தாண்டுதல் உள்ளிட்டவற்றில் திறமை வாய்ந்தவராக இருந்ததாலும் அவரை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

click me!