கோவை மதுக்கரை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (57). கூலி தொழிலாளி. இவரது மகன் சிவராம் (18). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கோவை அருகே செல்போன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மதுக்கரை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (57). கூலி தொழிலாளி. இவரது மகன் சிவராம் (18). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், கடந்த 10ம் தேதி நள்ளிரவில் கட்டில் மெத்தை மீது செல்போன் வைத்து சார்ஜ் போட்டு உபயோகித்துள்ளார். பின்னர் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிவிட்டார்.
அப்போது செல்போன் சார்ஜிங் ஒயரில் ஏற்பட்ட பழுதின் காரணமாக மெத்தையில் தீ பிடித்தது. தீ வேகமாக பரவியதை கவனிக்காமல் தூங்கிய சிவராம் உடையில் தீ பிடித்தது. வலி தாங்காமல் கதறிய போது பக்கத்து அறையில் தூங்கிய தந்தை மயில்சாமி மற்றும் குடும்பத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து சிவராமை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதில், சிவராம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.