அடப்பாவி... மது வாங்கி ஊசி மூலம் உடலில் செலுத்திய வாலிபர்... பிறகு நடந்தது என்ன?

Published : Oct 08, 2021, 02:54 PM ISTUpdated : Oct 08, 2021, 02:59 PM IST
அடப்பாவி... மது வாங்கி ஊசி மூலம் உடலில் செலுத்திய வாலிபர்... பிறகு நடந்தது என்ன?

சுருக்கம்

ஈரோடு மாவட்டம் பெரியசேமூர் கள்ளன்காடு விநாயகர் கோயில் வீதியை சேர்ந்த ராம்குமார் மகன் நாகராஜ்(23). கட்டிட தொழிலாளி நாகராஜ் மத மற்றும் பல்வேறு போதை பொருளை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 28ம் தேதி அதிக போதைக்காக டாஸ்டாக் கடையில் மதுபாட்டிலை வாங்கி அதனை ஊசி மூலம் உடலில் செலுத்தியுள்ளார். 

ஈரோட்டில் டாஸ்மாக்கில் மது வாங்கி ஊசி மூலம் உடலில் செலுத்திய வாலிபர் மயங்கி விழுந்து துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் பெரியசேமூர் கள்ளன்காடு விநாயகர் கோயில் வீதியை சேர்ந்த ராம்குமார் மகன் நாகராஜ்(23). கட்டிட தொழிலாளி நாகராஜ் மத மற்றும் பல்வேறு போதை பொருளை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 28ம் தேதி அதிக போதைக்காக டாஸ்டாக் கடையில் மதுபாட்டிலை வாங்கி அதனை ஊசி மூலம் உடலில் செலுத்தியுள்ளார். 

இதுதவிர போதை பொருட்களையும் உட்கொண்டுள்ளார். இதனார், அளவுக்கு அதிகமான போதையால் வீட்டிலேயே நாகராஜ் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் நாகராஜை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நாகராஜ் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நாகராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?