போக்கு காட்டும் ஆட்கொல்லி புலி… ஒன்பதாவது நாளாக ஏமாற்றத்துடன் திரும்பிய வனத்துறை.!

By manimegalai aFirst Published Oct 3, 2021, 7:12 PM IST
Highlights

40 நவீன கேமராக்கள், 3 டிரோங்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், மருத்துவர்கள் அடங்கிய 10 குழுக்கள், இரண்டு கும்கி யானைகளை வைத்து தேடியும் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை.

40 நவீன கேமராக்கள், 3 டிரோங்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், மருத்துவர்கள் அடங்கிய 10 குழுக்கள், இரண்டு கும்கி யானைகளை வைத்து தேடியும் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை.

 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடி மற்றும் தேவன் எஸ்டேட் பகுதியில் 4 பேரை அடித்துக் கொன்ற ஆட்கொல்லி புலியை தேடும் பணி ஒன்பதாவது நாளாக இன்று காலையில் தொடங்கியது. வேட்டை தடுப்பு காவலர்கள், மருத்துவக் குழுவினர், வேட்டை நாய்கள் புலியை தேடி வந்த நிலையில் ஆட்கொல்லி புலியை கண்டுபிடிக்க இரண்டு கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன.  கும்கிகளின் மீது ஏறி புதர்களுக்குள் புலியை தேடு பணிகளும் நடைபெற்றது.

காலையில் இருந்து புலியின் இருப்பிடம் தெரியாமல் வனத்துறையினர் திண்டாடி வந்தனர். மாலையில் ஆட்கொல்லி புலியின் இருப்பிடம் தென்பட்டதாக தகவல் வெளியாகிய நிலையில், வனத்துறை அதிகாரிகள் பரபரப்பாக புலியை தேடினர். ஆனால், இரவு நேரம் நெருங்கியதல் புலியை கண்டுபிடிப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. அத்துடன் ஆட்கொல்லி புலியை தேடும் பணியை அதிகாரிகள் நிறைவு செய்தனர். மீண்டும் நாளை காலை பத்தாவது நாளாக ஆட்கொல்லி புலியை தேடும் பணி தொடங்கும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

click me!