அரசு மேடையை அரசியல் மேடையாக மாற்றுவது அநாகரிகம்; முதல்வர் ஸ்டாலினுக்கு வானதி அறிவுரை

By Velmurugan s  |  First Published Mar 13, 2024, 10:22 PM IST

பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை அரசியல் மேடையாக்கியது அநாகரிகம் என்று பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலியகுளம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான தானியங்கி இயந்திரத்தை சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசாங்க நிகழ்ச்சிக்கு மரியாதை கொடுத்து பொதுமக்களின் நிகழ்ச்சி என்று சட்டமன்ற உறுப்பினர்களாகிய தாங்கள் செல்லும் பொழுது முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பொள்ளாச்சியில் அரசு மேடையை அரசியல் மேடையாக மாற்றி அநாகரீகமாக பேசி இருக்கிறார். 

அரசாங்கத்தின் விழாவில் பாரத பிரதமரை பற்றி குறை கூறியது, பாரதிய ஜனதா கட்சி பற்றி குறை கூறியது போன்றவை அரசியல் நாகரிகத்திற்கு அப்பாற்பட்டதாக நாங்கள் பார்க்கின்றோம். மேலும்  தமிழகத்திற்கு மத்திய அரசு என்ன செய்தது என்று கேட்டிருக்கிறார். பிரதமர் மோடி ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் அரசு நிகழ்ச்சிகளை இங்கே வந்து துவக்கி வைத்த போது  அருகிலேயே அமர்ந்து கேட்ட போது அவருக்கு தெரியவில்லையா? எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்காக கொடுத்து இருக்கிறார்? அப்பொழுதெல்லாம் உங்களுடைய காதுகளை வசதியாக மூடி வைத்து விட்டீர்களா? 

Latest Videos

undefined

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 2 நாட்களில் வேட்பாளர் பட்டியல் - பாஜக துணைத்தலைவர்

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோவை மாவட்டத்திற்கு கொடுத்ததாக கூறிய அவிநாசி சாலை மேம்பாலம், உக்கடம் மேம்பாலம் யார் ஆட்சியில் திட்டமிடப்பட்டு யார் கட்டியது? பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்டவை யார் ஆட்சியில் திட்டமிடப்பட்டு யார் கொண்டு வந்தது என கேள்வி எழுப்பியதோடு ஏற்கனவே தான் சட்டமன்றத்தில் தென்னை விவசாயிகளுக்காக  தேங்காய் எண்ணெய்களை ரேஷன் கடைகளில் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் அதைப் பற்றி எந்த அறிவிப்பும் கிடையாது. அதே வேளையில்  இலை வாடல் நோய் இருக்கின்ற தென்னை மரத்தை வெட்டி எடுப்பதற்கு 10 கோடி ரூபாய் நிதி கொடுப்பேன் என்று கூறுகிறார். தென்னை விவசாயத்தை காப்பாற்றுவதற்கு உதவி செய்யுங்கள் என்றால்  மரத்தை வெட்டி போடுவதற்கு பணம் கொடுக்கிறார்கள். 

மாநிலத்தின் முதலமைச்சருக்கு விவசாயிகளின் மீது இது தான் அக்கறையா? மேலும் பொள்ளாச்சியில் மின்னணு வேளாண் சந்தையை உருவாக்குவேன் என முதலமைச்சர் கூறியதை குறிப்பிட்டு பேசியவர், இந்த திட்டம் மத்திய அரசின் இ-நாம் திட்டம். இதைத் தான் தருவதாக முதலமைச்சர் பெருமை பேசுகிறார். இது போல ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போகலாம்.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் கட்டண படுக்கையறை - அமைச்சர் தகவல்

பா.ஜ.க வினர் whatsapp யுனிவர்சிட்டி வைத்து பொய் பரப்புகிறார்கள் என்று கூறுகிறார்கள் இவை அனைத்தும் தி.மு.க விற்கு சொந்தமானது. தி.மு.க கிட்டத்தட்ட 1967 முதல் ஒவ்வொரு முறையும் பொய் பேசி தான் ஆட்சிக்கு வந்து உள்ளீர்கள். முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு எதிராக என்று கூறி  இன்று  வரை அது பொய்யாக தான் உள்ளது. தி.மு.க வின் பொய்களும், பொய் வாக்குறுதிகளும் ஒவ்வொரு நாளும் மக்கள் இடத்தில் அம்பலப்பட்டு கொண்டு இருக்கின்றது. இலவச பேருந்து பயணம் என்றீர்கள் ஆனால் பேருந்துகள் இல்லை. பெண்களை பார்த்தால் பேருந்து நிற்காது  ஏனென்றால் இலவசமாக கொடுக்க வேண்டும் அல்லவா அதனால் தான். 

பொய் பேசுவது என்பது தி.மு.க வின் கலை  இதை வைத்துக் கொண்டு அரசு மேடையை இனி மேல் அரசியல் மேடையாக மாற்ற முயற்சிக்க வேண்டாம். 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து உள்ளது. எத்தனை முறை பட்டியலை கொடுக்க முடியும்? 11 மருத்துவக் கல்லூரிகள், டிபன்ஸ் காரிடர் போன்றவை எல்லாம் யார் கொடுத்தது? இன்றைக்கு அறிவித்த திட்டங்கள் கூட  மத்திய அரசின் திட்டம் தான் என்றார். 

click me!