தமிழகத்தில் ஒரு துளி கூட போதைப் பொருள் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் - எஸ்.பி.வேலுமணி

By Velmurugan sFirst Published Mar 12, 2024, 3:12 PM IST
Highlights

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவையில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனையை தமிழக அரசு தடுக்க வேண்டும் என கோவை குனியமுத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது.

தமிழக அரசின் திட்டங்கள் மதிப்பீடு, ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு 2 ஆயிரம் கோடிக்கு மேல் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு துளி கூட போதை பொருள் இருக்கக் கூடாது.

முதல்வர் குடும்பத்தோடு நெருக்கம்! போதைப்பொருளை விற்ற பணத்தை திமுக நிர்வாகிகளுக்கு கொடுத்த ஜாபர் சாதிக்! இபிஎஸ்

அந்த அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் வாயிலாக திமுக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள மாணவர்கள் சீரழிந்து கொண்டிருப்பதை தடுக்க வேண்டும். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் போதைப் பொருள் மட்டமல்ல, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கும் சீர்கெட்டுள்ளது. போதைப் பொருள் புழக்கத்தின் பாதிப்பை உணர்ந்து முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

click me!