நீலகிரி தொகுதியின் பாஜக முன்னாள் எம்.பி. மாஸ்டர் மதன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு பாஜக நிர்வாகிகள் மதியாதை செலுத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி பாலாஜி கார்டனில் வசித்து வந்தவர் மாஸ்டர் மதன்(வயது93). இவர் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் 1998 மற்றும் 1999 என இரண்டு முறை வெற்றி பெற்று உறுப்பினராக பொறுப்பு வகித்துள்ளார்.
வீட்ல ஒத்த ரூபா கூட இல்ல, வந்ததுக்கு நானே 20 ரூபா வச்சிட்டு போறேன்; திருடனின் செயல் இணையத்தில் வைரல்
undefined
வயது முதிவுர் காரணமாக கடந்த சில காலங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்த மாஸ்டர் மதன் நேற்று இரவு 11.10 மணியளவில் கலமானார். அவரது இறப்பு செய்தி கேட்டு கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாஜக உறுப்பினர்கள் அவரது வீட்டிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே மாஸ்டர் மதன் மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு மாஸ்டர் மதன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவர் தமது சமூக சேவை முயற்சிகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்ததற்காகவும் என்றென்றும் நினைவுகூறப்படுவார். தமிழகத்தில் எங்கள் கட்சியை வலுப்படுத்தவும் அவர் அரும்பாடு பட்டார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.