
கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரம் ராம் நகர் பகுதியில் திரையரங்கு அருகே காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லாட்டரி சீட்டு விற்பனையில் செய்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த சபரி என்பதும் கோவை பா.ஜ.க மாவட்ட இளைஞர் அணி செயலாளர் என்பதும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 10 கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்ததுடன் சபரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்