காரமடையில் காவல் துறையினர் இந்து அமைப்புகளுக்கு எதிராக செயல்படுவதாக கூறி பா.ஜா.க, இந்து முண்ணனி, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் காரமடை காவல்நிலையத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு.
கோவை மாவட்டம் காரமடையில் நேற்றைய தினம் ஹரியானா மாநிலத்தில் இந்து மக்களை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நேற்றைய முன்தினம் ஆர்பாட்டம் நடத்த அனுமதி கேட்கபட்ட நிலையில் காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
ஆனால் காவல் துறையினரின் உத்தரவை மீறி ஆர்பாட்டம் நடத்தியதாக கூறி 40க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் காரமடையில் இஸ்லாமிய கூட்டமைப்புகள் சார்பில் மணிப்பூர் மற்றும் ஹரியானா சம்பவத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆர்பாட்டத்தில் பாரத மாதா உருவத்தை அரை நிர்வாணமாக சித்தரித்தாக கூறப்படுகிறது.
அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து பள்ளிக்கு சென்ற மாணவன் மாயம்; காவல் துறை தேடுதல் வேட்டை
இதனால் ஆத்திரமடைந்த இந்து அமைப்புகள் காவல்துறை ஒரு மதத்திற்கு சாதகமாகவும், இந்துக்களுக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறி காரமடை காவல்துறை அலுவலகத்தை முற்றுகையிட இந்து அமைப்புகள் முடிவு செய்தனர். அதன்படி காலை இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜா.க பிரமுகர்கள் காரமடை கார்ஸ்டேன்டு பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து இந்து அமைப்பு அலுவலகங்களில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் காரமடை காவல்நிலையத்திற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்த இந்து அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்த காவல் துறையினர் மேட்டுப்பாளையம் டி.எஸ்பி அலுவலகத்தில் கோவை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சு வார்த்தை இறுதியில் இந்து அமைப்புகள் சார்பில் பாரத மாதாவை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து அமைப்பினர் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என தெரிவித்துள்ளனர்.