கோவையில் வேகமாக சென்று கொண்டிருந்த ரேக்ளா வண்டியில் மாடு மிரண்டதால் இருசக்கர வாகனத்தில் மோதி கோர விபத்து. தூக்கி வீசப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே பலி.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் பிரிவு அருகே இளைஞர்கள் இருவர் ரேக்ளா வண்டி ஓட்டி வந்தனர். அப்போது திடீரென மாடு மிரண்டு சாலையின் எதிர் திசையை நோக்கி பாய முயன்றது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி ரேக்ளா வண்டியில் மோதி தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் குப்பேபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 32) என்பவரது மனைவி புவனேஸ்வரி (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Crime: தோப்பு வீட்டில் வசித்த கணவன், மனைவி கல்லால் அடித்து கொடூர கொலை; எஸ்பி நேரில் விசாரணை
மேலும் ரேக்ளா வண்டி யார் ஓட்டி வந்தது என்பது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் கண்காணிப்பு காட்சி தற்போது வெளிவந்து காண்போரை இதயம் கனக்க செய்கின்றது.
பாம்பு கடித்து சிறுமி பலி; அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர்?