கோவை அருகே நள்ளிரவில் கத்தியை காட்டி மிரட்டி ஈரோடு மாவட்ட ஆட்சியர் வீட்டு பொருட்களை ஏற்றி சென்ற லாரியை மடக்கி பணம் கொள்ளையடித்த வாலிபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்தவர் கிருஷ்ணனுண்ணி. இவர் சமீபத்தில் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். ஆட்சியர் பங்களாவில் இருந்த பொருட்களை நேற்று முன்தினம் மினி லாரியில் ஏற்றினர். இந்த பொருட்கள், கிருஷ்ணனுண்ணியின் சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. வாகனத்தில் பொருட்களை ஏற்றிய பின்னர், வாகனம் கோவை அவினாசி சாலை வழியாக பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது.
மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு கஞ்சிக் கோணம்பாளையம், செட்டிபாளையம் ரோடு சந்திப்பில் லாரி நள்ளிரவில் 3 மணிக்கு சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், லாரி ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் (35) என்பவரிடம் டயர் பஞ்சராக இருப்பதாக கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து ஓட்டுநர் லாரியை ஓரமாக நிறுத்தி டயரில் காற்றின் அளவு குறைந்து விட்டதா? என பார்த்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் அவரை சுற்றி வளைத்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். லாரியில் ஓட்டுநர் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை பறித்த அவர்கள் அங்கேயிருந்து தப்பி சென்றனர்.
undefined
தோப்பு வீட்டில் வசித்த கணவன், மனைவி கல்லால் அடித்து கொடூர கொலை; எஸ்பி நேரில் விசாரணை
இது தொடர்பாக முத்து கிருஷ்ணன். கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக 2 தனிப்படை அமைக் கப்பட்டுள்ளது. பைபாஸ் ரோட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பொருட்களுடன் சேர்த்து லாரியை திருடிச்செல்ல திட்டமிட்டு மர்ம நபர்கள் பணத்தை மட்டும் திருடிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
பாம்பு கடித்து சிறுமி பலி; அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர்?