திரைப்படத்தில் வந்த நகைச்சுவை போல மைல் கல்லுக்கு படையலிட்டு வாழைமரம் கட்டி, வாழை இலையில் படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திரைப்படத்தில் வந்த நகைச்சுவை போல மைல் கல்லுக்கு படையலிட்டு வாழைமரம் கட்டி, வாழை இலையில் படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் இன்று ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் ஆட்டோ டிரைவர்கள், வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வேலை செய்யும் நபர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களை தூய்மையாக்கி பொரி, பழங்கள், சர்க்கரை, இனிப்புகள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்வார்கள். அதேபோல், தங்களின் வாகனங்களை கழுவி அதற்கு மாலை அணிவித்து , பூசணிக்காய் உடைத்தும் வழிபடுவார்கள்.
இதையும் படிங்க;- பேனர்களால் மக்களுக்கு அசம்பாவிதம் நேர்ந்தால்..... மாவட்ட ஆட்சியர் பகிரங்க எச்சரிக்கை
இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூலுவபட்டியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் புதிய மைல் கல் நட்டு வைத்தனர். அதில் சிறுவாணி 20 கிலோ மீட்டர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் சினிமா பட பாணியில் அந்த மைல் கல்லை தண்ணீர் ஊற்றி, மாலை அணிவித்து, வாழை மரம் கட்டி, அலங்காரம் செய்து படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாடினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
இதையும் படிங்க;- அண்ணா சாலையில் பைக் சாகசம் செய்த யூடியூப் பிரபலம்.. அதே இடத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வைத்த நீதிமன்றம்