காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி.. துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை..!

By vinoth kumar  |  First Published Jul 16, 2022, 9:59 AM IST

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து கடனாளியான விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் காரணமாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட ஆயுதப்படை காவலர் காளிமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறை துறைக்கு சொந்தமான இடத்தில், அரசுப் பொருட்காட்சி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது.  இந்த பொருட்காட்சியில் காவல் துறையினரின் சாதனைகள் மற்றுத் காவல் தறையில் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. இதில் கோவை மாநகர காவல் துறை கண்காட்சி அரங்கில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காளிமுத்து (29) என்ற ஆயுதப்படை காவலர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

Latest Videos

undefined

இதையும் படிங்க;- இதெல்லாம் வேலைக்கு ஆகாது.. இனி ஒரு உயிர்கூட போகக்கூடாது என்றால் அவசரச்சட்டத்தை இயற்றுக.. EPS..!

அப்போது, நேற்று 3 மணியளவில்  திடீரென மாநகர காவல் துறை கண்காட்சி அரங்கில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சென்று பார்க்கும் போது, காவலர் காளிமுத்து வயிற்று பகுதியில் சுப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட சக காவலர்கள் அதிர்ச்சியடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து, மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இதையும் படிங்க;-  அதிமுக ஆட்சியிலும் பாமக தான்.. திமுக ஆட்சியிலும் பாமக தான்.. காலரை தூக்கி விடும் ராமதாஸ்..!

இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக காளிமுத்து உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து கடனாளியான விரக்தியில் காளிமுத்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!