இந்திய சந்தை மட்டும் இன்றி சர்வதேச சந்தையிலும் ஜவுளித் துறை ஆராய்ச்சி மையம் முக்கிய பங்கு கொண்டுள்ளது.
கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் சார்பில் 'டெக்ஸ் பேர் 2022' கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அமைச்சர்கள் காந்தி, சக்கரபானி மற்றும் பா.ஜ.க. தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பியூஸ் கோயல், “இந்த் டெக்ஸ் பேர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் திட்டம் திள்ளிப் போனது. பெரிய துறையாக விளங்கும் ஜவுளித்துறையில் தமிழ் நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. வேலை வாய்ப்பு, புது முயற்சிகள், ஏற்றுமதி என அனைத்து பிரிவுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய சந்தை மற்றும் சர்வதேச சந்தையில் ஜவுளி ஆராய்ச்சி மையம் முக்கிய பங்கு கொண்டுள்ளது.”
undefined
இந்தியா இரண்டாவது இடம்:
“கொரோனா பெருந்தொற்றின் போது கோவை இந்திய ஜவுளி ஆராய்ச்சி மையம் சார்பில் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கவசங்கள் இந்தியா மட்டும் இன்று வெளிநாடுகளுக்கும் பயன் அளித்தது. பாதுகாப்பு கவசங்களை அதிகளவில் தயாரிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் ஜவுளித் துறையில் உலக வர்த்தகத்தை மேம்படுத்தி வருகிறோம்.”
“புதிய தொழில் துறையினருக்கு வர்த்தம் செய்வதற்கான நடைமுறைகளை எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. கோவை மாநிலத்தின் சிறு, குறு தொழில் துறையினரின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் வியப்பு அளிக்கும் வகையில் உள்ளது. கோவை சுற்றுப் புற பகுதிகளில் தரமான பருத்தி உற்பத்தி செய்து வழங்கும் விவசாயிகளுக்கு எனது வணக்கங்கள். மத்திய அரசு சார்பில் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு தொடர்ந்து உதவி மற்றும் ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.”
ஜவுளித் துறை மிக முக்கியம்:
“பல்வேறு திட்டங்களில் தமிழ் நாடு மத்திய அரசின் பலன்களை பெற்று வருகிறது. ஜவுளித் துறை மூலம் நாடு முவுக்க கோடிக்கனக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஜவுளித் துறையை சேர்ந்தவர்கள் புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வளர்ச்சியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு ஜவுளித் துறை மிகப் பெரிய பங்களிப்பை வழங்கும்,” என தெரிவித்தார்.
இவரைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேசினார். அப்போது, “பிரதமர் நரேந்தி மோடி கடந்த எட்டு ஆண்டு ஆட்சியில் பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறார். சேவை, நல்லாட்சி, ஏழைகளின் முன்னேற்றம் எனும் தாரக மந்திரத்துடன் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது,” என கூறினார்.