Narendra Modi: மூன்றாவது முறையாக மோடி பிரதமராவார்; ஆருடம் சொன்ன கோவை கோவில் காளை

Published : May 20, 2024, 11:16 AM IST
Narendra Modi: மூன்றாவது முறையாக மோடி பிரதமராவார்; ஆருடம் சொன்ன கோவை கோவில் காளை

சுருக்கம்

பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டி பத்ரகாளியம்மன் கோயிலில் வளர்க்கப்படும் சிவா என்ற கோவில் காளை நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பார் என்று ஆரூடம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டியில் அமைந்துள்ளது நந்திவனநாதர் பத்ரகாளியம்மன் கோயில். இக்கோயிலை அமைத்து வழிபாடுகள் நடத்தி வந்த பேரூர் மடத்தின் தொண்டர், நாகலிங்கேஸ்வரி சித்தர் பீட குமாரசாமி அடிகளார் கடந்த 48 நாட்களுக்கு முன்பு இக்கோவில் வளாகத்தில் ஜீவசமாதி அடைந்தார். இந்நிலையில் குமாரசாமி அடிகளாரின் 48ம் நாள் நிறைவு வழிபாடு (ஜீவசமாதி வழிபாடு) கோவில் வளாகத்தில்  நடைபெற்றது.

வேள்வி வழிபாடு, அபிஷேகம், அலங்கார பூஜை, பேரொளி வழிபாடு, அதனைத் தொடர்ந்து மகேசுவர பூஜை, அன்னதானம் ஆகியன நடைபெற்றன. நிகழ்ச்சி குறித்து கோயில் பூசாரி கோபால்சாமி கூறுகையில், இக்கோயிலில் அன்னை பராசக்தி பத்ரகாளியம்மன் என்ற நாமத்தோடு நின்ற கோலத்தில் மூன்று சிரசுகளோடும் ஓர் உடலுமாக காட்சி அளிக்கிறார். இங்கு பரிவார மூர்த்திகளாக  சிவபெருமான், கணபதி, கருப்பணசாமி ஆகியோர் உள்ளனர்.

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை!!அமராவதி ஆற்றை அழிக்கும் சதியை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பதா?சீறும் அன்புமணி

மேலும் இக்கோயில் நாயகனாக விளங்கும் நந்தி தேவருக்கு  ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் சிறப்பாக பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இந்த கோவிலுக்கு மூன்று முறை சிவனடியார் கோலத்தில் சிவன் காட்சியளித்துள்ளார். மேலும் அவருக்கு பிடித்த வாகனம் காளை மாடு சிவா எனப் பெயரிட்டு இங்கு பராமரிக்கப்படுகிறது. 

லாரி மீது மோதிய அரசு பேருந்து!!மீட்பு பணியின் போது அடுத்தடுத்து மோதிய 4 கார்கள்-அதிகாலையில் நடந்த ஷாக் சம்பவம்

இந்த மாட்டின் அடுத்த பகுதியில் சிவன் முத்திரை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பதிந்துள்ளது. பக்தர்களுக்கு பிரதோஷம் தினத்தன்று தனது முன்னங்கால் ஆசிர்வாதம் செய்கிறது. மனதில் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேற்றப்படுகிறது. மேலும் பாரத பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்கள் என சிவா குறி சொல்லியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?
கதறியும் விடாமல் கோவை கல்லூரி மாணவியை சீரழித்த கொடூரர்களின் போட்டோ வெளியானது!