காதலனை கரம் பிடித்த கையோடு தமிழக ஸ்டைலில் குத்தாட்டம் போட்ட வெளிநாட்டு பெண்

By Velmurugan s  |  First Published Apr 6, 2023, 2:46 PM IST

பொள்ளாச்சி அருகே உள்ள குப்பிச்சிபுதூர் கிராமபகுதியில் டீக்கடைக்காரருக்கு வெளிநாட்டு மருமகள் ஆட்ட பாட்டங்களுடன் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி கிராம மக்கள் வியந்து பார்த்த திருமணம்..


பொள்ளாச்சி அருகே உள்ள குப்பிச்சிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தண்டபாணி, கிருஷ்ணவேணி தம்பதியரின் மகன் சாவுத்ரி ராஜ். தண்டபாணி அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். சாவுத்ரி ராஜ் கோவையில் படிப்பை முடித்துவிட்டு மெக்சிகோவில் வேலை பார்த்து வந்தார். சாவுத்திரி ராஜ் அங்கு தன்னுடன் மெக்சிகோவில் வேலை பார்க்கும் டனியலா என்ற பெண்ணை காதலித்துள்ளார்.

இரு வீட்டாரின் சம்மதத்தையும் பெற்று தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள சாவுத்ரி ராஜ் விரும்பி உள்ளார். இதனை அடுத்து சாவுத்ரிராஜன் குடும்ப முறைப்படி ஆனைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மெக்சிகோ நாட்டு மணப்பெண்ணிற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கும் விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

Tap to resize

Latest Videos

பழனியில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த அரசு பேருந்து ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது

திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மணப்பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்  மெக்சிகோ நாட்டில் இருந்து வந்து கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த நிலையில் இரு விட்டாரும் நடனமாடி மகிழ்ச்சி அடைந்தனர். வெளிநாட்டு மணப்பெண்ணுடன் நடைபெற்ற திருமணத்தை காண ஊர் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர்.

click me!