கிணத்துக்கடவு பாலத்தில் பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்; கார் மோதியதால் நிகழ்ந்த விபரீதம்

By Velmurugan s  |  First Published Mar 2, 2024, 11:43 AM IST

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் பாலத்தில் விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்கச் சென்ற ஆம்புலன்ஸ் மீது கார் மோதியதில் ஆம்புலன்ஸ் முழுவதுமாக தீ பிடித்து எரிந்தது.


கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வழியாக கோவை - பொள்ளாச்சி நான்கு வழி சாலை செல்கிறது. நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் நேற்று இரவு உடுமலையில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் வேன் கோவை மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்து சென்று விட்டு மீண்டும் உடுமலைக்கு திரும்பி  கொண்டிருந்தது.

Tap to resize

Latest Videos

ஆம்புலன்ஸ் உடுமலை, ஆலாம்பாளையம் சேர்ந்த வினோத்குமார் (வயது 22) என்ற வாலிபர் ஓட்டிச் சென்றார். ஆம்புலன்ஸ் கிணத்துக்கடவு மேம்பாலத்தில் ஏறிய போது அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருந்து ஒரு நபர் தவறி கீழே விழுந்தார். அதை கண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் பின்னோக்கி வந்து அந்த வாலிபரை மீட்க வந்த போது பின்னால் கோவையில்  இருந்து செட்டியக்காபாளையம் சென்ற கோகுல் (28) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸ் பின்பக்கம் பலமாக மோதியது. 

மை வி3 ஆன்லைன் டிவி நிறுவனர் கைது; மருத்துவ அறிக்கையால் அம்பலமான நெஞ்சுவலி நாடகம்

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் தூக்கி வீசப்பட்டது. இதில் ஆம்புலன்ஸ்சில் உள்ள  பெட்ரோல் டேங்க் உடைந்து பெட்ரோல் கீழே கசிந்ததால் கார் சாலையில் உரசி சென்ற வேகத்தில் திடீரென ஆம்புலன்ஸ் வேன் தீ பிடித்தது. தீ மளமளவென ஆம்புலன்ஸ் வேன் முழுவதும் பரவியது. ஆம்புலன்ஸ்வேன்  தீ பற்றி எரிவதை கண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வினோத் குமார் அதிர்ஷ்டவசமாக காயம்யின்றி  உயிர் தப்பினார். 

விவசாயி சின்னத்திற்கும் உங்களுக்கும் ராசியில்லை; வேறு சின்னத்தில் போட்டியிடுங்கள் - சீமானுக்கு நீதிமன்றம்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய ஊழியர்கள் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இதனால் மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு  ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு காரில் வந்த யாருக்கும் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். அதன் பின்னர் கிரேன்  வரவழைக்கப்பட்டு சாலையில் எரிந்து கிடந்த ஆம்புலன்ஸ் வேன், கார் ஆகியவற்றை மீட்டனர். 

click me!