காரமடை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த கும்பலை கைது செய்த காவல் துறையினர் அவர்கள் பயன்படுத்திய பட்டா கத்தி, கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் காரமடை அடுத்துள்ள சேரன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் காவல் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் எஸ்ஐ அரவிந்தராஜன் உள்ளிட்டோர் காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கார் ஒன்று நின்று கொண்டு இருந்துள்ளது.
காரை சோதனையிட்டதில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அப்பகுதியில் தங்கி இருந்த கும்பலின் கார் என்பது தெரியவந்தது.
undefined
இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனையிட்ட போது அங்கும் பட்டாக்கத்திகள் இருந்துள்ளன. தொடர்ந்து அங்கிருந்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த உதுமான் பாரூக் (வயது 38), அன்சர் அலி(22), சாதிக்(36), சிவகுரு(34), ராமச்சந்திரன்(33), ஜெயக்குமார்(22), ராகேஷ்(24), சந்தோஷ்(30) உள்ளிட்ட எட்டு பேர் அடங்கிய கும்பலை கைது செய்த போலீசார் அவர்களை காரமடை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் அவர்கள் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததும், இதற்காக கேரளாவில் இருந்து மாருதி கார் ஒன்றினை திருடி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து 8 பேரையும் கைது செய்த காரமடை போலீசார் அவர்களிடம் இருந்து ஆறு பட்டாகத்திகள், மாருதி காரையும் பறிமுதல் செய்தனர்.
2 கிராம் தங்கத்தில் தேர்தல் விழிப்புணர்வு; கோவை கலைஞரின் அசத்தல் முயற்சிக்கு குவியும் பாராட்டு
பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கொள்ளையடிக்க திட்டமிட்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் காரமடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.