கோவையில் மென்ஸ் சலூன் என்ற கடையில் பேசியல் செய்த 17 வயது சிறுவனின் முகம் அதிக வெப்பத்துடன் வெளியேறிய நீராவியால் வெந்துபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் மென்ஸ் சலூன் என்ற கடையில் பேசியல் செய்த 17 வயது சிறுவனின் முகம் அதிக வெப்பத்துடன் வெளியேறிய நீராவியால் வெந்துபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில் ராக் மென்ஸ் பியூட்டி சலூன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் சஞ்சய் தாஸ் (32) நடத்தி வருகிறார். இந்த சலூன் கடையில் பீகாரை சேர்ந்த வித்யானந்தன் (22) என்பவர் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அந்த சலூனிற்கு பேசியல் செய்தற்காக 17 வயது சிறுவன் சென்றுள்ளார். இதையடுத்து சிறுவனின் முகத்தை வித்யானந்தன் பேசியல் செய்து கொண்டு இருந்தபோது கருவியில் வெந்நீர் மூலம் நீராவியை முகத்தில் தெளித்தார்.
இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சென்னை ஐ.ஐ.டி. மாணவி..!
இதனால், சிறுவனின் முகத்தில் பட்டதும் முகம் முழுவதும் காயம் ஏற்பட்டு அந்த சிறுவன் வலியால் அலறி துடித்துள்ளான். இதனையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் சிறுவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக கடை உரிமையாளர் சஞ்சய்தாஸ், ஊழியர் வித்யாதரன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க;- ஹாஸ்டலில் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. சிக்கிய கடிதம்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!