கோவையில் 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாம்; பொது மக்கள் அச்சம்

By Velmurugan sFirst Published Jan 7, 2023, 2:45 PM IST
Highlights

கோவை மாவட்டம் பெரிய தடாகம், சின்னதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ள நிலையில், கணுவாய் பிரதான சாலையில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானையை காட்டுக்குள் விரட்டும் பணியி்ல் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பெரியதடாகம், சின்ன தடாகம் சோமனுர், மருதமலை  வனப்பகுதியில் தற்போது 15 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

பொங்கல் தினத்தில் SBI தேர்வு; தேர்வு தேதியை மாற்றி அமைக்ககோரும் தேர்வர்கள்

இந்நிலையில் நேற்று இரவு மருதமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை வடவள்ளி கணுவாய் சாலையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. பின்னர் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்து விட்டு அருகில் உள்ள வாழை தோட்டத்திற்குள் சென்றது. இது குறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே குடியிருப்பு பகுதிக்குள் வந்து தண்ணீர் குடிக்கும் யானையை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர். 

உறுப்புகளை தானமாக வழங்கி இருவருக்கு உயிர் கொடுத்த ஒன்றரை வயது குழந்தை

மேலும் இன்று காலை கணுவாய் பிரதான சாலையில் ஒற்றைக் காட்டு யானை திடீரென சாலையில் வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து சிதறி ஓடினர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது யானை சாலையில் சுற்றி திரியும் அந்த காட்சிகள்  பரவி வருகிறது.

click me!