வடகிழக்கு பருவமழை.. சென்னையில் உடனே இந்த பணிகளை நிறுத்தி வைக்க மாநகராட்சி அதிரடி உத்தரவு.!

By vinoth kumar  |  First Published Sep 21, 2023, 8:27 AM IST

இதுகுறித்து அனைத்து சேவை துறைகளுக்கும், நகர்ப்புர எரிவாயு பகிர்ந்தளிக்கும்  நிறுவனங்களுக்கும் மற்றும் கண்ணாடி இழை வடங்கள் பதிக்கும் நிறுவனங்களுக்கும் சாலை வெட்டு பணியை 21.09.2023 முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்குமாறு கடிதம் அனுப்பப்படுகிறது. 


சென்னையில் சாலையை வெட்டும் பணி,  குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிரடி பிறப்பித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு பல்வேறு சேவை துறைகளாகிய சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், நகர்ப்புற எரிவாயு பகிர்ந்தளிக்கும் நிறுவனங்கள், கண்ணாடி இழை வடங்கள் பதிக்கும் நிறுவனங்கள் மூலமாக மண்டலம் 1 முதல் 15 வரையிலான பேருந்து சாலைகள்  மற்றும் உட்புறச் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டுகள் அனைத்தும் 20.09.2023 அன்றுடன் நிறுத்தி  வைக்கப்படுகிறது என்று பெருநகர சென்னை மாநகராட்சியின் கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- மழை பாதிப்பு..! சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பள்ளிகள் இயங்குமா.? மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

இதுகுறித்து அனைத்து சேவை துறைகளுக்கும், நகர்ப்புர எரிவாயு பகிர்ந்தளிக்கும்  நிறுவனங்களுக்கும் மற்றும் கண்ணாடி இழை வடங்கள் பதிக்கும் நிறுவனங்களுக்கும் சாலை வெட்டு பணியை 21.09.2023 முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்குமாறு கடிதம் அனுப்பப்படுகிறது. மேலும் இக்காலத்தில் அவசர தேவைகளுக்கு மட்டும் சாலை வெட்டு மேற்கொள்ள இணை ஆணையர்(பணிகள்) வட்டார துணை ஆணையர்கள் (வடக்கு, மத்தியம், தெற்கு) அவர்களின் மூலமாக கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர்கள் அவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனுமதி அளிக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- வேலூரில் கனமழை: தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

click me!