சென்னை புறநகர்ப் பகுதிகளில் கொட்டும் மழை.. சென்னைவாசிகள் மகிழ்ச்சி !!

By Raghupati R  |  First Published Sep 16, 2023, 4:58 PM IST

அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் சென்னையில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “வடமேற்கு வங்கக்கடல் மற்றும்அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு ஒடிசா-மேற்கு வங்கப் பகுதிகளில் நிலவுகிறது.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 18, 19,20-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Tap to resize

Latest Videos

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமானமழை பெய்யக்கூடும். அதிகபட்சவெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்” என்று கூறியிருந்தது.

தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் வெளியிட்டிருந்த பதிவு ஒன்றில், இன்று KTCC (சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள்) நாளாக இன்று இருக்கப் போகிறது. மேலும் இந்த மாதத்தின் பிற்பகுதியில் KTCC, வேலூர், ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வானிலை மையம் மற்றும் தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் கூறியிருந்தது போல, தற்போது சென்னை நகரின் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 2 நாட்களுக்கு பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

சோலி முடிஞ்சு.. உடையும் இந்தியா கூட்டணி.. இளம் தலைவருக்கு பாதிப்பு: பிரபல நாடி ஜோதிடர் பாபு கணிப்பு !!

click me!