சென்னை விமானத்தில் 113 பயணிகளிடமும் சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி பல மணிநேரம் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல பயணிகள் தங்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள், தங்கப் பேஸ்ட் என மொத்தம் 13 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தனர்.
ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த ஒரே விமானத்தில் 113 பேரும் தங்கம், ஐபோன்கள் உள்ளிட்ட கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளிடம் சோதனை செய்வது வழக்கம். இந்த சோதனையின் போது முறைகேடாக எடுத்து வரும் தங்கம் உள்ளிட்ட பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பிடிப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், மஸ்கட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தங்கம், ஐபோன்கள், லேப்டாப்புகள் உள்ளிட்ட பொருட்களை 100க்கு மேற்பட்ட பயணிகள் கடத்தி வருவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையும் படிங்க;- தலைக்கேறிய காமம்! தாலி கட்டிய புஷருன் தலையில் கல்லை போட்ட மனைவி! கோர்ட் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா?
இதனையடுத்து அந்த விமானத்தில் வந்த 186 பேரையும் இதனால் சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த 186 பேரையும் விமான நிலைய சுங்க இலாகா அலுவலகத்துக்குள் வைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில், 73 பயணிகள் கடத்தல் விவகாரங்களில் தலையிடாத, பயணிகள் என்று தெரியவந்ததை அடுத்து அவர்களை விடுவித்தனர்.
மீதமுள்ள 113 பயணிகளிடமும் சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி பல மணிநேரம் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல பயணிகள் தங்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள், தங்கப் பேஸ்ட் என மொத்தம் 13 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தனர். மேலும் சூட்கேஸ் மற்றும் பைகளில் 120 ஐபோன்கள், 84 ஆண்ட்ராய்டு போன்கள், வெளிநாட்டு சிகரெட்கள், குங்குமப்பூக்கள், லேப்டாப்புகளை மறைத்து வைத்திருந்தனர்.
இதையும் படிங்க;- தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்.. கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்தது அம்பலம்! ஒர்க் ஷாப் ஓனர் பகீர்.!
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 14 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து பயணிகள் 113 பேர் மீதும் சுங்க சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தனர். ஆனாலும் இந்த 113 பேரும் சாதாரண கடத்தல் குருவிகள் தான். இவர்களை இயக்கும் முக்கிய கடத்தல் கும்பலின் தலைவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.