முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் கீழ் ரூ.1000 பெற தகுதி பெற்ற மகளிர் எத்தனை பேர் என்கிற, தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்த போது, திமுக கட்சி சார்பில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்து 1 வருடத்திற்கு மேலாகியும், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்த போது, மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கு என 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
மேலும் இதற்கான திட்டத்தை, முதலமைச்சர் மு க ஸ்டாலின் செப்டம்பர் 15 - ஆம் தேதி அண்ணா பிறந்த நாளை ஒட்டி, அவருடைய சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் துவங்கி வைக்கிறார். அதன்படி இந்தத் திட்டத்தில் பயன்பெறும் மகளிருக்கு சில வரைமுறைகளும் கொண்டுவரப்பட்டது. அதற்குள் வருபவர்களுக்கு மட்டுமே கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என கூறப்பட்டது.
undefined
மலேசிய பிரதமருடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு! பின்னணி என்ன? வைரலாகும் போட்டோஸ் மற்றும் வீடியோஸ்!
இதற்கான விண்ணப்பங்கள் சேகரிக்கும் பணி இரண்டு கட்டமாக... அதாவது ஜூலை 24-ம்தேதி முதல் 3 நாட்கள் நியாயவிலைக்கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு, ஜூலை 27-ம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பப்பதிவு தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதியுடன் முடிந்தது. அதே போல் இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது கலைஞர் மகளிர் உரிமை தொகை பெரும், இல்லத்தரசிகள் பற்றிய தகவலை முதலமைச்சல் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 பெற 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் தகுதி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் மகளிர் உதவி தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் பலர் குஷியாகி உள்ளனர்.