ஆஹா ஸ்பெஷல் மசாஜா.. ஆசை ஆசையாய் சென்ற சென்னை ஐடி ஊழியர்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

By vinoth kumar  |  First Published Sep 9, 2023, 2:28 PM IST

சென்னை நுங்கம்பாக்கம் கோபால்நகர் புதிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(29). இவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  தனது செல்போனில் மசாஜ் சென்டர் குறித்து தேடியபோது அவருக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.


ஸ்பெஷல் மசாஜ் என்று ஆசைவார்த்தை கூறி ஐடி ஊழியரை வரவழைத்து கை, கால்களை கட்டிப்போட்டு நகை, பணம் ஆகிவற்றை பறித்து சென்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை நுங்கம்பாக்கம் கோபால்நகர் புதிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(29). இவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  தனது செல்போனில் மசாஜ் சென்டர் குறித்து தேடியபோது அவருக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் உள்ள வீட்டில் ஸ்பெஷல் மசாஜ் சென்டர் புதிதாக திறந்திருப்பதாகவும், சலுகைகள் இருப்பதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- மசாஜ் சென்டரில் மஜாவாக நடந்த விபசாரம்.! அரை குறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள்.! கல்லா கட்டிய பிசினஸ்க்கு ஆப்பு.!

இதனை நம்பி கார்த்திக் மசாஜ் செய்வதற்காக அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது இருவர் கதவை திறந்து கார்த்திகை உள்ளே தள்ளி கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டனர். பின்னர் அவரை ஒரு அறையில் கை, கால்களை கட்டிப்போட்டு செயின், மோதிரம் மற்றும் பர்சில் இருந்த 4000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர்.

undefined

இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த 3 வயது மகன் கொலை.. நாடகமாடிய தாய் சிக்கியது எப்படி தெரியுமா?

மேலும் அந்த கும்பல் கிரெடிட் கார்டை வாங்கிச் சென்று 2 லட்சம் ரூபாய் பணத்தை ஏடிஎம் மூலம் எடுத்து கொண்டு அவரை விரட்டி அடித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கார்த்தி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!