மெட்ரோ வாட்டர் சார்பாக ஒரு மாத காலத்திற்கு புதிய பணிகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது எனவும், ஒருவார காலத்திற்குள் பழுதடைந்த சாலைப்ணிகளை முடிக்கவேண்டும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுதி உள்ளார்.
அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சாலைகள் பணிகள், மழை நீர் வடிகால் பணிகள், வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசணைக் மேற்கொள்ளப்பட்டது. இதில் மேயர் பிரியா, துணை மேயர், ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. அதில் சென்னையில் மழைநீர் வடிகால், வடிகால் இணைப்பு, சாலை பணிகள், குடிநீர் வழங்கல் துறை சார்பாக பைப் அமைக்கும் பணிகள் நடைபெறுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
சனாதன தர்மத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்துவிடும் - உதயநிதி நம்பிக்கை
இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சாலைகளை ஒரு வார காலத்தில் சரி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். மெட்ரோ வாடர் பணிகள் மேற்கொள்ள எந்த பள்ளமும் புதிதாக தோண்ட வேண்டாம். மழை காலம் வர இருப்பதால் ஒரு மாத காலத்திற்கு எந்த புதிய பணிகளும் மேற்கொள்ள வேண்டாம். நடைபெற்று வரும் பணிகள் விரைவாக முடித்து கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.
சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வடிகால்களை ஒன்றோடு ஒன்று இணைக்கும் பணிகள் வரும் 30ம் தேதி நிறைவடையும், இணைக்கும் பணிகள் முடிவு பெறாமல் இருக்கும் சில இடங்களில் தக்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ரேடார் இணைப்பு துண்டிப்பு; அரி கொம்பன் யானையை வலை வீசி தேடும் வனத்துறை அதிகாரிகள்
முன்னதாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்வதற்காக தூய்மை இந்தியா திட்ட சேமிப்பு நிதியின் கீழ் ரூ.30.28 கோடி மதிப்பீட்டில் 74 காம்பாக்டர் வாகனங்கள் மற்றும் நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.4.37 கோடி மதிப்பீட்டில் 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனங்களை அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் மாளிகையில் கொடி அசைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.