சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்றும், இந்த பணிகள் விரைவாக முடிவடைந்தால் முன்னதாக மின் தடை நீக்கப்படும் என்றும் மின்சார வாரியத்தின் மூலம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க;- பாளையங்கோட்டை அருகே மாடியில் துணி காய போட்ட கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!
undefined
கிண்டி :
நங்கநல்லூர் கன்னிகா காலனி ஒரு பகுதி, உள்ளகரம் ஒரு பகுதி, துரைசாமி தோட்டம், வோல்டாஸ் காலனி 50 அடி ரோடு, லட்சுமி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்:
பல்லாவரம் பழைய சேன்டல் ரோடு, மசூதி தெரு, பெரிய பாளையத்தம்மன் தெரு, ஆஞ்சநேயர் கோயில் தெரு, பாத்திமா மன்சில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அம்பத்தூர்:
அயப்பாக்கம் மேல் அயனம்பாக்கம், செட்டி தெரு, விஜயா நகர் முகப்பேர் எம்.ஜி.மெயின் ரோடு, கலைவாணர் நகர், தேவர் நகர் அன்னை நகர் டி.வி.எஸ் நகர், பத்மாவதி நகர், ஏ.வி.எஸ் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம்… விவசாயிகள் பயன்பெறுவது எப்படி? முழு விவரம் உள்ளே!!