தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக ஒரு சில இடங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்து வரும் கனமழையினால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரிக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக ஒரு சில இடங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக செங்குன்றத்தில் மிக கனமழையாக 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரிக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க;- எந்தெந்த மாவட்டங்களின் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா? முழு விவரம் இதோ..!
புழல் ஏரிக்கு நீர்வரத்து 967 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2536 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் ஏரிகளுக்கான நீர்வரத்தை 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், நீர்வரத்திற்கேற்ப உபரிநீர் வெளியேற்றுவது முடிவெடுக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- கனமழை எதிரொலி... சென்னையில் 2 சுரங்கப்பாதைகள் மூடல்!! காவல் துறை அறிவிப்பு!