தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும்.
சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணா நகர், போரூர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்றும், இந்த பணிகள் விரைவாக முடிவடைந்தால் முன்னதாக மின் தடை நீக்கப்படும் என்றும் மின்சார வாரியத்தின் மூலம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அண்ணா நகர்:
மதுரவாயல் கணபதி நகர் 1 முதல் 7வது தெரு, மெட்ரோ நகர், திருமூர்த்தி நகர், காந்தி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
undefined
போரூர்:
திருமுடிவாக்கம் 5, 6 மற்றும் 14வது பிரதான சாலை, திருமுடிவாக்கம் சிட்கோ
அடையார்:
வேளச்சேரி பை பாஸ் சாலை (ஜி.ஆர்.டி.யில் இருந்து சிறந்த மருத்துவமனை), மேட்டுத் தெரு, நாட்டூர் தெரு, ராஜலட்சுமி முழு பகுதியும் ராஜ்பவன் ராசாவித் ஹோட்டல், சங்கீதா ஹோட்டல். திரு.வி.க. தெரு, அன்பில் தர்மலிங்கன் தெரு, நேரு நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பெரம்பூர்:
காந்தி நகர், முத்தமிழ் நகர் 6வது மற்றும் 8வது பிளாக், வில்லிவாக்கம் பகுதி, எம்டிஎச் சாலை, மூர்த்தி நகர், துரைசாமி தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அம்பத்தூர்:
ஜே.ஜே. நகர், அம்பேத்கர் நகர், கங்கை அம்மன் நகர், வினோத் விருட்ச அடுக்குமாடி குடியிருப்புகள், கோல்டன் ஹோம்ஸ் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.