வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி.. கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம்..!

By vinoth kumar  |  First Published Nov 2, 2022, 9:20 AM IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  மேலும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.


கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் பெருக்கால் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  மேலும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Latest Videos

வடக்கிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்.

1. மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்;-

* இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை

* கணேசபுரம் சுரங்கப்பாதை

2. மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து தடைபெற்றுள்ளது;-

* இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை சேறும் சகதியுமாக உள்ளதால் இரண்டுசக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

* கணேசபுரம் சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் சேர்ந்துள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

3. மழைநீர் பெருக்குகாரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடு;-


*  இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை அதின் உள்ளே அனுமதிக்கப்படாமல்
 இரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக உள்ளிருந்து வெளியில் செல்லக்கூடிய வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி நகர் ரவுண்டானா மற்றும் பேசின் பாலம் வழியாகவும், வெளியிலிருந்து உள்ளே வரக்கூடிய வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை முரசொலி மாறன் பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

4. சாலையில் பள்ளம்:-

Nil

5. மாநகரபேருந்து போக்குவரத்து மாற்றம்:- 

*  இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை அதின் உள்ளே அனுமதிக்கப்படாமல் இரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

*  கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக உள்ளிருந்து வெளியில் செல்லக்கூடிய வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி நகர் ரவுண்டானா மற்றும் பேசின் பாலம் வழியாகவும், வெளியிலிருந்து உள்ளே வரக்கூடிய வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை முரசொலி மாறன் பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

6. மரங்கள் விழுந்து அகற்றும் பணி:

*  அபிராமபுரம் 3 வது தெரு

*  கீழ்பாக்கம் மகரிக்ஷி பள்ளி அருகில்

click me!