ஸ்பா என்றாலே விபச்சார நிலையமாக தான் பார்ப்பீங்களா… கவால்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டும் கண்டனம்.!

By manimegalai aFirst Published Oct 26, 2021, 5:54 PM IST
Highlights

விபச்சாரம் நடப்பதாக வழக்கு பதிவோம் என்று மிரட்டி காவல்துறை பணம் கேப்டதாக மனுதாரர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

விபச்சாரம் நடப்பதாக வழக்கு பதிவோம் என்று மிரட்டி காவல்துறை பணம் கேப்டதாக மனுதாரர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே ஸ்பா எனப்படும் அழகு நிலையங்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடப்பதாக புகார் எழுந்து வருகிறது. ஒருசில இடங்களில் இது தொடர்பான கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில், ஒரு சில போலீஸார் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மசாஜ் சென்டர்களை மிரட்டி பணம் பறிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில் வில்லோஸ் என்ற பெயரில் செயல்படும் ஸ்பார் உரிமையாளர் ஹேமா ஜூவானி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தங்கள் நிறுவனம் மசாஜூடன் கூடிய அழகு நிலையமாக செயல்பட்டு வருகிறது. சென்னையில் எங்களுக்கு பல இடங்களில் கிளைகள் உள்ளன. எங்களது அழகு நிலையங்களில் அடிக்கடி சோதனை என்ற பெயரில் போலீஸார் அத்துமீறுவதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பான வழக்கில் புகார்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லாமல் காவல்துறையினர் தொந்தரவு செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது என்று சுட்டிகாட்டியிருந்தார்.

இந்தநிலையில், தங்களது தாம்பரம் கிளைக்கு சோதனை என்று சென்ற போலீஸார் பணம் கேட்டுள்ளனர். பணம் தராவிட்டால் விபச்சாரம் நடைபெறுவதாக பொய் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் போலீஸார் மிரட்டுகின்றனர் என்று மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தாம்பரம் காவல் ஆய்வாளர், மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி இந்த சம்பவத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.

அப்போது பேசிய நீதிபதி, மசாஜ் சென்டர் என்றாலே விபச்சார நிலையம் என்ற கண்ணோட்டத்தோடுதான் காவல் துறை பார்க்குமா என்று கண்டித்தார். போலீஸார் தங்களுடைய அதிகாரத்த்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் நீதிபதி கூறினார். மசாஜ் நிலையங்கள் மீது விதிமீறல்கள் புகார்கள் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் அதைவிடுத்து மிரட்டும் நோக்கில் செயல்படக் கூடாது என்று அறிவுறுத்திய நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

click me!