பள்ளிக்கரணையில் இளம் பெண் கூட்டுப் பலாத்காரம்: கைம்பெண்களுக்கு குறி: கைதான பல் டாக்டரின் லீலை அம்பலம்

By Pothy Raj  |  First Published Jul 13, 2022, 6:05 PM IST

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் கணவனை இழந்த இளம் பெண்ணை போதைக்கு அடிமையாக்கி கூட்டுப்பலாத்காரம் செய்த மருத்துவர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.


சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் கணவனை இழந்த இளம் பெண்ணை போதைக்கு அடிமையாக்கி கூட்டுப்பலாத்காரம் செய்த மருத்துவர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் சமீபத்தில் பல் மருத்துவர் ஒருவர் மீது பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரில் மருத்துவரும், அவரின் நண்பர்களும் சேர்ந்து தன்னை கூட்டுப்பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்திருந்தார்.

Tap to resize

Latest Videos

அந்த இளம் பெண் புகாரில் கூறியதாவது 

சென்னையை அடுத்த,  பள்ளிக்கரணை  காமக்கோட்டி நகரை சேர்ந்தவர்  நிஷாந்த்(30). இவர் அந்த பகுதியில் கிரிஸ்டல் என்ற பெயரில், பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். 

undefined

என்னை கட்டாயப்படுத்தி பலமுறை பலாத்காரம் செய்தார்.. என் சாவுக்கு அந்த பாஜக நிர்வாகி தான் காரணம்..!

நிஷாந்த் தனது  தோழி ஷெரினிடம் தனது மருத்துவமனைக்கு பெண் உதவியாளர் ஒருவர் தேவை எனக்  கேட்டுள்ளார்.  ஷெரினும், , கணவனை இழந்த தனது 30 வயது தோழியை நிஷாந்திடம் வேலைக்கு பரிந்துரை செய்துள்ளார்.

நிஷாந்த் தன்னை மனைவி விவாகரத்து செய்தவர் என்று  கூறி அந்த இளம் பெண்ணிடம் பழகியுள்ளார். அதன்பின் அந்த பெண்ணுடன் பாசமாக பழகிய நிஷாந்த். சிறிது நாள் கழித்து, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். நிஷாந்தின் வார்த்தையை நம்பி, அந்த இளம் பெண்ணும் பழகியுள்ளார். 

அந்த இளம் பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக கூறிய நிஷாந்த், அந்தப் பெண்ணுடன், பல முறை தனிமையில் இருந்துள்ளார். பழகப்பழகப் பாலும் புளிக்கும் என்பதைப் போல், நிஷாந்துக்கு அந்த இளம்பெண் தேவை குறையத் தொடங்கியது.

போலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணுடன் போலீஸ் SI பல முறை உல்லாசம்.. காவல் நிலையத்தில் அசிங்கம்.

நாளடைவில், நிஷாந்தின் சுய ரூபம், அந்த பெண்ணிற்கு தெரியவந்தது. நிஷாந்த் தனது நண்பர்கள் இருவரை அந்த பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்து பழக வைத்தார். இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு இளம் பெண்ணை நிஷாந்த், அழைத்துச் செல்லும்போது, அவரின் இரு நண்பர்களும் உடன் வந்துள்ளனர். அங்கு மூவரும் சேர்ந்து போதைப் பொருள் பயன்படுத்தி, அந்த இளம் பெண்ணும் போதை மருந்தை வழங்கி கூட்டுப் பலாத்காரம் செய்தனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் சேலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, மருத்துவர் நிஷாந்த், அவரின் தோழி ஷெரீன், மற்றொரு நண்பரைக் கைது செய்தனர், நிஷாந்தின் மற்றொரு நண்பர் தலைமறையாக இருக்கிறார்

போலீஸார் நடத்திய விசாரணையில் நிஷாந்த், கணவனை இழந்த இளம் பெண்களைக் குறிவைத்து அவர்களை காதல் வலையில் வீழ்த்தி, பாலியல் பலாத்காரம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் காதல் லீலை..10ம் வகுப்பு மாணவியை வீடியோ எடுத்து கதற வைத்த வாலிபர்

இதுபோல் 4 பெண்களை பலாத்காரம் செய்ததும். அந்தப் பெண்களின் ஆபாசப் படங்களை வெளியிடுவதாகக் கூறி மிரட்டி வந்துள்ளார். நிஷாந்தால் ஏமாற்றப்பட்ட பெண்கள் வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என்பதால், மவுனமாக இருக்கிறார்கள். நிஷாந்த் கைது செய்யப்பட்டிருப்பதால், பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக வந்து புகார் அளிக்க வேண்டும் என்று போலீஸார் தெரிவிக்கிறார்கள். மேலும், நிஷாந்துக்கு போதைப் பொருட்கள் எவ்வாறு கிடைத்தது என்றும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். 

click me!