அரியலூர் மாவட்டத்தில் 4 மாத ஆண் குழந்தையை தண்ணீர் முக்கி கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இராஜேஸ்வரி. இவருக்கு திருமணமாக நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இராஜேஸ்வரியின் கணவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கணவர் இறந்த நிலையில் மறுமணம் செய்துகொள்ளாமல் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வாழ்வாதாரத்திற்காக திருப்பூருக்குச் சென்று பனியன் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்த இராஜேஸ்வரி கடந்த 3 ஆண்டுகளாக அங்கேயே பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அப்பெண்ணுக்கு திருப்பூரிலேயே வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு அதன் விளைவாக கர்ப்பமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இராஜேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்க தேர் இழுத்து துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு
குழந்தை பிறந்த பின்னர் அப்பெண் தனது தந்தையின் சொந்த கிராமமான அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த கொடுக்கூர் கிராமத்திற்கே வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் தொடர்ந்து இராஜேஸ்வரியிடம் 9 ஆண்டுகளுக்கு முன்னரே கணவர் இறந்துவிட்ட நிலையில், இந்த குழந்தை யாருக்கு பிறந்தது என்று கூறி தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளனர்.
ஜெயங்கொண்டம் நகராட்சியில் ஆட்டோக்களை ஆய்வு செய்து ஓட்டி பார்த்த எம்.எல்.ஏ. கண்ணன்
இதனால் தொடர்ந்து மனவேதனையில் இருந்த அப்பெண் தனது 4 மாத கைக்குழந்தையை தண்ணீர் டிரம்மில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். மேலும் தானும், அருகில் உள்ள முந்திரி தோப்பிற்குச் சென்று மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குவாகம் காவல் துறையினர் 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.