திடீரென சாலையின் குறுக்கே ஓடிய குழந்தை; குழந்தையை காப்பாற்ற வீட்டுக்குள் பேருந்தை செலுத்திய ஓட்டுநர்

By Velmurugan s  |  First Published Jul 14, 2023, 7:02 PM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திடீரென குழந்தை ஒன்று சாலையின் குறுக்கே ஓடிவந்த நிலையில், ஓட்டுநர் குழந்தையை காப்பாற்ற முயன்றபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டில் புகுந்தது.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு மீன்சுருட்டி வழியாக காட்டுமன்னார்குடி நோக்கி அரசு நகரப்பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்து குருவாலப்பர் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. 

அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை நாய் ஒன்று துரத்தியுள்ளது. இதனால் பயந்துபோன சிறுமி திடீரென சாலையின் குறுக்கே ஓடி வந்துள்ளார். சாலையின் குறுக்கே ஓடிய சிறுமியை காப்பாற்ற பேருந்து ஓட்டுநர் அரசு பேருந்தை சாலையின் ஓரமாக திருப்பியுள்ளார். 

Latest Videos

தந்தையை விசாரிக்க வந்த போலீஸ்; அச்சத்தில் ஓடி ஒளிந்த 8 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி 

இதில் சாலை ஓரமாக இருந்த தடுப்புச் சுவற்றில் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து  பேருந்து ஓட்டுநர் சீட்டில் இருந்து பேருந்து உள்ளேயே கீழே விழுந்துள்ளார். இதையடுத்து பேருந்து. அருகில் இருந்த மாடி வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. இந்த விபத்தில் ஓட்டுநர் திறமையாக செயல்பட்டதால் அதிஷ்டவசமாக சாலையில் குறுக்கே வந்த சிறுமியும், பயணிகள் உட்பட அனைவரும் உயிர்த்தப்பினர். சிறுமியையும், பயணிகளையும் காப்பாற்றிய ஓட்டுநரின் திறமையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து அண்ணன், தம்பி இருவர் பலி

click me!