அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஒக்கநத்தம் கிராமத்திற்கு விடுமுறைக்கு வந்த இராணுவ வீரரின் இரண்டு மகள்கள் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் இந்திய இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள்கள் புனேவில் உள்ள இந்திய இராணுவ பள்ளியில் படித்து வந்தனர். அட்சயா 12 ஆம் வகுப்பு முடித்து உள்ளார். அபி 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் விடுமுறைக்கு ஒக்கநத்தம் கிராமத்திற்கு வந்த இரண்டு பெண் குழந்தைகளும் பிலிச்சிகுழி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் குளத்திற்கு குளிப்பதற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் குளித்திக்கொண்டிருந்த இருவரும் திடீரென நீரில் மூழ்கத் தொடங்கினர். சிறிது நேரம் கழித்து அவ்வழியாக வந்த கிராம மக்கள் குளத்தின் கரையில் சிறுமிகளின் உடை இருந்ததால் சந்தேகமடைந்து குளத்திற்குள் இறங்கி தேடி பார்த்தனர்.
undefined
வேலை வாங்கி தருவதாக கூறி கிராம பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த ஊர் தலைவர்; கடலூரில் பரபரப்பு
அப்போது சிறுமிகள் இருவரும் நீருக்குள் இருந்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் உடல்களை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
சளி தொந்தரவுக்கு வந்த சிறுமிக்கு நாய் கடிக்கான ஊசி; செவிலியர்களின் அலட்சியத்தால் கதறும் பெற்றோர்