செந்துறை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியின் கண் முன்னே தந்தையும், சகோதரியும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை (வயது 62) மாற்றுத் திறனாளியான இவர் தனது மூத்த மகள் பழனியம்மாளை அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்லநாயகபுரம் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவரது இளைய மகள் தேவியை திருச்சியில் உள்ள பெரியார் கல்லூரியில் சேர்த்து விட்டு திருச்சியில் இருந்து பயணிகள் ரயிலில் செந்துறைக்கு வந்துள்ளனர்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாபர் ஆசம், விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய சுப்மன் கில்
செந்துறை ரயில் நிலையத்தில் இறங்கிய மூன்று பேரில் தேவி நேரடியாக ரயில் தண்டவாளத்தை கடந்து ரயில் நிலைய நடைமேடைக்கு வந்துள்ளார். கால்கள் சரிவர நடக்க முடியாத நிலையில் பிச்சபிள்ளையை பழனியம்மாள் ரயில்வே நடைபாதையில் நடந்து சென்று சாய் தளத்தில் இறங்கி ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது எதிரே திருச்சி நோக்கி வந்த நிஜாமுதீன் விரைவு ரயிலை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரயில் தண்டவாளத்தில் நின்ற நிலையில் தந்தையை காப்பாற்ற பழனியம்மாள் முயன்று உள்ளார். ஆனால் இருவர் மீதும் விரைவு ரயில் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கல்லூரி மாணவி கண் முன்னே தந்தை மற்றும் அக்காள் ரயிலில் அடிபட்டு உடல் சிதறி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
த.வெ.க கொடி.. அது வாகை மரம் இல்லையாம்; அப்புறம் அது என்ன மரம்? இதென்னப்பா புது விளக்கம்!!
இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.