ராமர் இருந்ததற்கு ஆதாரமும் கிடையாது, வரலாறும் கிடையாது - அரசு விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேச்சு

By Velmurugan s  |  First Published Aug 2, 2024, 4:25 PM IST

ராமர் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக கூறுகின்றனர், ஆனால் ராமர் இருந்ததற்கு எந்த ஆதாரமும் கிடையாது, வரலாறும் கிடையாது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி திருவாதிரை அரசு விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்ட அரியலூர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து சிறப்புரை ஆற்றினார்.

செப்டம்பரில் மீண்டும் நிலச்சரிவு.. வெள்ளம் வரும்.. லா நினா பற்றி எச்சரித்த இந்திய வானிலை மையம்!

Tap to resize

Latest Videos

undefined

அப்போது அவர் பேசுகையில், நமது குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள், முன்னோர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு விழா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த மன்னுக்கு பெருமை சேர்த்த மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுத்து கொண்டாடுவது நமது கடமை. ராமருக்கு 3000 ஆண்டுகள் வரலாறு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ராமர் இருந்ததற்கு ஆதாரமும் கிடையாது, வரலாறும் கிடையாது. 

சென்னையில் பயங்கரம்! 17 வயது சிறுவன் சரமாரி வெட்டி படுகொலை! உடல் அடையாறு ஆற்றில் வீச்சு!

ஆனால் நமது மன்னன் ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கு சாட்சியாக அவர் கட்சிய கோவில்கள், வெட்டிய குளங்கள் தற்போதும் நம்மிடம் உள்ளன. ராஜேந்திரன் போன்றவர்களை நாம் கொண்டாடாமல் போனால், வரலாறு இல்லாதவர்களை நம் தலையில் கட்டிவிடுவார்கள். ராமரை பற்றி பேசுபவர்களே அவதாரம் என்று தான் குறிப்பிடுவார்கள். அவதாரம் என்றால் பிறக்க முடியாது, கடவுளாக பிறந்துவிட்டால் அவதாரமாக இருக்க முடியாது. நம்மை மயக்கி நம்முடைய சரலாற்றை மறைத்து வேறு ஒரு வரலாற்றை உயர்த்தி காட்டுவதற்காகத்தான் இதை எல்லாம் செய்கிறார்கள் என்றார்.

click me!