
WWE முன்னாள் மல்யுத்த வீரரான ஹல்க் கோகன் என்ற டெர்ரி ஜீன் போல்லியா மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். தம்பா உணவகத்தில் வைத்து ஹல்க் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஹல்கின் காதலை 45 வயதான ஸ்கை டெய்லி உடனே ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து இருவரும் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இன்ஸ்டாவிலிருந்து கிரிக்கெட்டர் வார்த்தையை நீக்கிய புவனேஷ்வர்குமார்!
ஹல்க் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியின் போது தனது திருமணம் பற்றிய செய்தியை அறிவித்தார். கடந்த ஆண்டு ஒரு பார்ட்டியில் தனது ஸ்கை டெய்லியை சந்தித்து அவர் மீது காதல் வயப்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறித்திருக்கிறார். இது போன்ற வாய்ப்பு கொடுத்த நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அனில் கும்ப்ளே, கபில் தேவ் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!
ஹல்க் ஏற்கனவே லிண்டா கிளவுஸ் என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில் அவர்களுக்கு ப்ரூக் (35) மற்றும் நிக் (32) என்று இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு லிண்டாவை விவாகரத்து செய்து 2010 ஆம் ஆண்டு ஜெனிஃபர் மேக் டேனியல் என்ற பெண்ணை மணந்தார். அவருடன் 10 ஆண்டுகாலம் வாழ்ந்த நிலையில், தற்போது 3ஆவது முறையாக ஸ்கை டெய்லியை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
சூர்யகுமார் யாதவ்விற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!
ஒரு பார்ட்டியில் டெய்லியை சந்தித்த நிலையில், அவருடன் ஒரு வருட காலமாக டேட்டிங்கில் இருந்துள்ளார். ஸ்கை ஒரு யோகா மாஸ்டர் மற்றும் அக்கவுண்டன்ட். ஸ்கைக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் காதலை வெளிப்படுத்திய நிலையில் திருமண நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.