உலக அளவில் ரசிகர்கள் இருக்கும் WWE மல்யுத்தப் போட்டியில் மகளிர் பிரிவில் முன்னாள் சூப்பர் ஸ்டாரும், “டப் எனப்” போட்டியின் சாம்பியனான சாரா லீ 30வயதிலேயே அகால மரணமடைந்தார்.
உலக அளவில் ரசிகர்கள் இருக்கும் WWE மல்யுத்தப் போட்டியில் மகளிர் பிரிவில் முன்னாள் சூப்பர் ஸ்டாரும், “டப் எனப்” போட்டியின் சாம்பியனான சாரா லீ 30வயதிலேயே அகால மரணமடைந்தார்.
இந்த செய்தியை அவரின் தாய் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அபாரமான அரைசதம் அடித்து கடைசிவரை கடுமையாக போராடிய சஞ்சு சாம்சன்..! முதல் ODI-யில் இந்தியா தோல்வி
அமெரி்க்காவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை சாரா லீ WWE போட்டியைக் காணும் ரசிகர்களால் அதிகம் அறியப்பட்டவர். இவர் முன்னாள் மல்யுத்த வீரர் வெஸ்டின் பிளேக்கை திருமணம் செய்து, 3 குழந்தைகளும் உள்ளன.
WWE is saddened to learn of the passing of Sara Lee. As a former "Tough Enough" winner, Lee served as an inspiration to many in the sports-entertainment world. WWE offers its heartfelt condolences to her family, friends and fans. pic.twitter.com/jtjjnG52n7
— WWE (@WWE)WWE டப் எனப் 6-வது சீசனில் இடம்பெற்று 13 இறுதிச்சுற்று வீராங்கனைகளில் ஒருவராக சாரா லீ இருந்தார். கடந்த 2016ம் ஆண்டு, ஜனவரி 16ம்தேதி முதன்முதலில் என்எக்ஸ்டி மல்யுத்தப் போட்டிக்கு சாரா லீ ஒப்பந்தமாகினார். அதன்பின் படிப்படியாக சாரா லீ போட்டிகளி்ல் வெற்றி பெறவே ரசிகர்கள் அதிகரித்தனர். அதன்பின் WWE சீசனுக்கு வந்த சாரா லீ டப்எனப் சீசனில் சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.
சாரா லீ தாயார் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட செய்தியில் “ கனத்த இதயத்துடன் இந்த செய்தியை உங்களிடம் பகிர்கிறேன், நம்முடைய சாரா வெஸ்டன், கடவுள் ஏசுவிடம் சென்றுவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் ஹோப் எனும் சிறிய நகரில் பிறந்தவர் சாரா லீ. 2010ம் ஆண்டு சான்போர்ட்டில் உள்ள மெரிடியன் பள்ளியில் பட்டப்படிப்பு முடித்து, மல்யுத்தப்பயிற்சிக்கு தயாராகினார், கல்லூரிக் காலத்திலேயே பவர்லிப்டிங்கிலும் சாரா லீ சிறப்பானவராகத் திகழ்ந்தார்.
WWE போட்டியின் சூப்பர்ஸ்டார்களான செல்சியா கிரீன், நிக்கி ஆஷ் உள்ளிட்ட ஏராளமானோர் சாரா லீ மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
WWE அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் சாரா லீ மறைவு குறித்து பதிவிட்ட இரங்கல் செய்தியில் “ சாரா லீ மறைவுச் செய்தி கேட்டு WWE அமைப்பு மிகுந்த வேதனைப்படுகிறது. டப் எனப் போட்டியின் முன்னாள் சாம்பியன் சாரா லீ. உலகளவில் WWEபோட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் இளைஞர்களுக்கு உற்சாகமூட்டுபவராக சாரா லீ இருந்தார். சாரா லீ குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் WWE ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.