WFI, Bajrang Punia: பத்மஸ்ரீ விருதை திரும்ப தருவதாக பிரதமருக்கு கடிதம் எழுதிய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா!

By Rsiva kumar  |  First Published Dec 22, 2023, 7:21 PM IST

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருதை திரும்ப வழங்குவதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் விசுவாசியான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பத்மஸ்ரீ விருதை திருப்பி தருவதாக குறிப்பிட்டுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அன்புள்ள பிரதமர் ஜி உங்களது உடல்நிலை நன்றாக இருப்பதாக நம்புகிறேன். நீங்கள் பல வேலைகளில் பிஸியாக இருக்க வேண்டும் ஆனால், நாட்டின் மல்யுத்த வீர்ரகளுக்கு என்ன நடக்கிறது என்பதை உங்கள் கவனத்தை ஈர்க்க இதை எழுதுகிறேன்.

Tushar Deshpande: பள்ளி க்ரஷை திருமணம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸின் செல்லப்பிள்ளை – வாழ்த்து சொன்ன சிஎஸ்கே!

Tap to resize

Latest Videos

பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக இந்த ஆண்டு ஜனவரி மாதம் நாட்டின் பெண்கள் மல்யுத்த வீரர்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டத்தை ஆரம்பித்தனர் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நானும் அவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டேன். காமன்வெல்த் விளையாட்டுப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர், அரசாங்கம் வலுவான நடவடிக்கைக்கு உறுதியளித்ததை அடுத்து போராட்டம் நிறுத்தப்பட்டது.

SA vs IND:ஒரே கேட்ச் தான், டோட்டல் மேட்சும் காலி: இம்பேக்ட் பீல்டர் ஆஃப் தி சீரிஸ் விருது வென்ற சாய் சுதர்சன்!

ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகும், பிரிஜ் பூஷனுக்கு எதிராக எஃப்ஐஆர் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில், டெல்லி காவல்துறை குறைந்தபட்சம் அவருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் மீண்டும் ஏப்ரல் மாதம் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினோம். ஜனவரியில் 19 புகார்தாரர்கள் இருந்தனர், ஆனால் ஏப்ரல் மாதத்திற்குள் எண்ணிக்கை 7 ஆக குறைந்தது. இதன் பொருள் பிரிஜ் பூஷன் தனது செல்வாக்கை செலுத்தி மற்ற 12 மல்யுத்த வீரர்களை தங்கள் எதிர்ப்பை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினார்.

Thoothukudi Flood: மழையில் இடிந்த வீடு: வேதனையோடு கபடி விளையாடி வரும் தமிழ் தலைவாஸ் வீரர் மாசாணமுத்து!

“போராட்டம் 40 நாட்கள் நீடித்தது. அந்த நாட்களில் எங்களுக்கு நிறைய அழுத்தம் இருந்தது. போராட்டம் நடத்தவும் அனுமதிக்கப்படவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பதக்கங்களை கங்கையில் வீசினோம். அப்போது விவசாய தலைவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் எங்களை தடுத்து நிறுத்தினர். அந்த நேரத்தில் உங்கள் அமைச்சரவையில் இருந்த ஒரு அமைச்சர் எங்களை அழைத்து நீதியை உறுதி செய்தார். நாங்கள் மத்திய உள்துறை அமைச்சரையும் சந்தித்தோம், அவர் எங்களுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்தார். எனவே, நாங்கள் எங்கள் போராட்டத்தை நிறுத்திவிட்டோம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஷ்தீப் சிங் வேகத்தில் அடிபணிந்த தென் ஆப்பிரிக்கா – வெற்றியோடு தொடரை கைப்பற்றிய இந்தியா!

ஆனால், கடந்த 21 ஆம் தேதி நடந்த மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருக்கான தேர்தலில், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் விசுவாசியான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெர்விக்கும் வகையில் சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

"நாங்கள் இரவு முழுவதும் கண்ணீர் சிந்தினோம். என்ன செய்வது, எங்கு செல்வது என்று எங்களுக்குப் புரியவில்லை. அரசு எங்களுக்கு நிறைய கொடுத்துள்ளது. எனக்கு 2019 இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அர்ஜுனா, கேல் ரத்னா விருதும் பெற்றேன். நான் இந்த விருதுகளைப் பெற்றபோது, ​​நான் கிளவுட் ஒன்பதில் இருந்தேன். ஆனால் இன்று சோகம் அதிகமாகிறது. மேலும் ஒரு பெண் மல்யுத்த வீராங்கனை தனது பாதுகாப்பின் காரணமாக விளையாட்டை விட்டு விலகியதே காரணம் என்று மல்யுத்த வீரர் கூறினார்.

SA vs IND ODI:தென் ஆப்பிரிக்காவின் பொறுமையை சோதித்த திலக் வர்மா, சஞ்சு சாம்சன் – இந்தியா 296 ரன்கள் குவிப்பு!

பெண் விளையாட்டு வீரர்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களது வாழ்க்கையை மாற்றுவதற்கு விளையாட்டு பெரிதும் உதவியாக இருந்துள்ளது. ஆனால், பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பது இந்திய அரசின் ஒரு பிரச்சாரமாக இருக்கும் நிலையில், பெண்கள் இப்போது விளையாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை உள்ளது. மேலும் ‘விருது பெற்ற மல்யுத்த வீரர்களான எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நமது பெண் மல்யுத்த வீராங்கனைகள் அவமதிக்கப்படும் போது பத்மஸ்ரீ விருது பெற்றவனாக என்னால் வாழ முடியாது. எனவே இந்த விருதை உங்களிடமே திருப்பித் தருகிறேன் என்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

मैं अपना पद्मश्री पुरस्कार प्रधानमंत्री जी को वापस लौटा रहा हूँ. कहने के लिए बस मेरा यह पत्र है. यही मेरी स्टेटमेंट है। 🙏🏽 pic.twitter.com/PYfA9KhUg9

— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia)

 

click me!