
உலக வலைகோல் பந்தாட்ட லீக் போட்டியில் ஸ்காட்லாந்தை எதிர்கொண்ட இந்தியா அதனை 4–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிப் பெற்றது.
உலக வலைகோல் பந்தாட்ட லீக் அரையிறுதிச் சுற்று இரண்டு போட்டிகள் கொண்டதாகும். இதில் ஒரு போட்டி இலண்டனில் நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொண்ட பத்து அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா - தென்கொரியா அணிகள் மோதின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினா அணி 2–1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது.
‘பி’ பிரிவில் நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 6–வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, தரவரிசையில் 23–வது இடத்தில் உள்ள ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது.
இதில், இந்திய அணி 4–1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.
இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை கனடாவை எதிர்கொள்கிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.