
உலக ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியுடன் இன்று மோதுகிறது.
உலக ஹாக்கி அரையிறுதிப் போட்டி இலண்டனில் இன்று நடைபெறுகிறது.
இந்திய அணி தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கிறது.
ஸ்காட்லாந்து அணி தரவரிசையில் 23-ஆவது இடத்தில் இருக்கிறது.
இந்தப் போட்டியில் ஏ பிரிவில் ஆர்ஜென்டீனா, இங்கிலாந்து, தென் கொரியா, சீனா, மலேசியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
பி பிரிவில் இந்திய அணி, நெதர்லாந்து, கனடா, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணியின் பின்கள வீரரான ரூபிந்தர் பால் சிங், நடுகள வீரரான எஸ்.கே.உத்தப்பா ஆகியோர் உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் இருந்து விலகியுள்ளனர்.
ரூபிந்தர் பால் சிங் காயம் காரணமாக இடம்பெறவில்லை.
உத்தப்பா, குடும்ப விவகாரம் காரணமாக அணியில் இருந்து விலகியிருக்கிறார்.
ரூபிந்தர் பால் சிங் சிங்கிற்குப் பதிலாக ஜஸ்ஜித் சிங் குலார் சேர்க்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.